ஜோதிடம் • நாம யோகம் • பரிகாரம்

27 நாம யோகங்களுக்கான பரிகாரங்கள்

யோகி, அவயோகி, நட்சத்திரம், பாதகம் மற்றும் செய்ய வேண்டிய பாரம்பரிய பரிகார முறைகள்

ஜோதிடத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் காணப்படும் பல்வேறு யோகங்கள் அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் நல்ல மற்றும் சவாலான பலன்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றன. அவற்றில் 27 நாம யோகங்கள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

ஒவ்வொரு நாம யோகத்திற்கும் குறிப்பிட்ட யோகி நட்சத்திரம் மற்றும் அவயோகி நட்சத்திரம் குறிப்பிடப்படுகின்றன. ஜாதகத்தில் இந்த யோகங்கள் எந்த பாவகத்தில் அமைந்துள்ளன என்பதன் அடிப்படையில் சில பரிகார முறைகள் ஜோதிட மரபில் கூறப்படுகின்றன.

இந்த பதிவில் 27 நாம யோகங்களுக்கான பரிகாரங்கள், யோகி, அவயோகி, நட்சத்திரம், பாதகம் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

27 நாம யோகங்களுக்கான பரிகாரங்கள்

1, விஸ்கம்ப நாமயோகம்

யோகி: பூசம் - சனி
அவயோகி: திருவோணம் - சந்திரன்

இவை கால புருஷனுக்கு எத்தனையாவது ஸ்தானமாக வருகிறதோ அதற்கு பரிகாரம் எடுக்க வேண்டும்.

யோகி பரிகாரம்
நாம் பயன்படுத்த வேண்டும்.
அவயோகி பரிகாரம்
தானம் கொடுக்க வேண்டும்.

பூசம் - 4 ஆம் பாதகம் - நல்ல ஆடை உடுத்த யோகம்.

திருவோணம் - 10 ஆம் பாதகம் (மகரம்) - கால் ஊனமாவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும்.

இந்த மாதிரியே அனைத்து யோகங்களுக்கும் கடைபிடிக்க வேண்டும்.

2, பரீதி நாமயோகம்

யோகி: ஆயிலியம் - 4 ஆம் பாதகம்.
அவயோகி: அவிட்டம் - 10, 11 இடங்கள்.
யோகி பரிகாரம்
ஏழை கல்விக்கு உதவுதல்.
அவயோகி பரிகாரம்
ஏழை கால் பிரச்சனை உடையோர்க்கு தானம் செய்தல்.

3, ஆயுஸ்மான் நாமயோகம்

யோகி: மகம் - 5 ஆம் பாதகம்.
அவயோகி: சதயம் - 11 ஆம் பாதகம்.
யோகி பரிகாரம்
கர்ப்பிணி பெண்களுக்கு உதவுதல்.

4, சௌபாக்கியம் நாமயோகம்

யோகி: பூசம் - 5 ஆம் பாதகம்.
அவயோகி: பூரட்டாதி - 11 ஆம் பாதகம், 12 ஆம் பாதகம்.
யோகி பரிகாரம்
ஏழை பெண்களுக்கு உதவுதல்.
அவயோகி பரிகாரம்
ஏழை மற்றும் வயதானவர்களுக்கு செருப்பு தானம் செய்தல்.

5, சோபனம் நாமயோகம்

யோகி: உத்திரம் - 5 ஆம் பாதகம், 6 ஆம் பாதகம்.
அவயோகி: உத்திரட்டாதி - 12 ஆம் பாதகம்.
யோகி
ஏழை குழந்தைக்கு மருத்துவ உதவி செய்தல்.
அவயோகி
ஏழை முதியவருக்கு செருப்பு தானம் செய்தல்.

6, அதிகண்ட நாமயோகம்

யோகி: ஹஸ்தம் - 6 ஆம் பாதகம்.
அவயோகி: ரேவதி - 12 ஆம் பாதகம்.
யோகி
ஏழை குழந்தைக்கு கை பாதிப்பு மருத்துவத்திற்கு உதவுதல்.
அவயோகி
சிறிதளவு கடன் வாங்க வேண்டும். இதனால் காலபுருஷனின் 6ஆம் வீட்டைச் செயல்படுத்தும் யோகம் ஏற்படும்.

மீனவர்களுக்கு தானம் செய்யலாம்.

7, சுகர்மம் நாமயோகம்

யோகி: சித்திரை - 6 ஆம் பாவகம் & 7 ஆம் பாவகம்.
அவயோகி: அஸ்வினி - 1 ஆம் பாவகம்.
யோகி
ஏழை திருமணத்திற்கு கடன் கொடுக்கலாம்.
அவயோகி
தொழிலாளிக்கு தானம் செய்ய வேண்டும்.

8, திருதி நாமயோகம்

யோகி: சுவாதி - 7 ஆம் பாவகம்.
அவயோகி: பரணி - 1 ஆம் பாவகம்.
யோகி
மனைவியை முன்னிறுத்தி எது செய்தாலும் வெற்றி.
அவயோகி
ஏழை பெண்களுக்கு திருமண உதவி செய்ய வேண்டும்.

9, சூலம் நாமயோகம்

யோகி: விசாகம் - 7 ஆம் பாவகம் & 8 ஆம் பாவகம்.
அவயோகி: கார்த்திகை - 1 ஆம் பாவகம், 2 ஆம் பாவகம்.
யோகி
திருமண வயதை கடந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையை தேர்வு செய்து உதவி செய்ய வேண்டும்.
அவயோகி
தொழிலாளிக்கு அடிக்கடி தானம் செய்ய வேண்டும்.

10, கண்ட நாமயோகம்

யோகி: அனுஷம் - 8 ஆம் பாதகம்.
அவயோகி: ரோகிணி - 2 ஆம் பாதகம்.
யோகி
மாநகராட்சியின் பொதுக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய உதவி செய்ய வேண்டும்.
அவயோகி
உணவகத்தில் பணிபுரியும் பரிமாறுபவர்களுக்கு உணவு தானம் செய்ய வேண்டும்.

11, விருத்தி நாமயோகம்

யோகி: கேட்டை - 8 ஆம் பாதகம்.
அவயோகி: மிருகசீரிடம் - 2 ஆம் பாதகம், 3 ஆம் பாதகம்.
யோகி
திருநங்கைகளுக்கு உதவுதல்.
அவயோகி
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உணவு தானம் செய்ய வேண்டும்.

12, துருவம் நாமயோகம்

யோகி: மூலம் - 9 ஆம் பாதகம்.
அவயோகி: திருவாதிரை - 3 ஆம் பாதகம்.
யோகி
தொழிலாளர்கள் & கூலிவாளர்களுக்கு உதவுதல்.
அவயோகி
நடன கலைஞர்களுக்கு தானம் செய்தல்.

13, வியாகாதம் நாமயோகம்

யோகி: பூராடம் - 9 ஆம் பாதகம்.
அவயோகி: புனர்பூசம் - 3 ஆம் பாதகம், 4 ஆம் பாதகம்.
யோகி
பெண்களுக்கு உதவுதல் + அவர்கள் மனம் குளிரும்படி செய்தல்.
அவயோகி
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உடைகள் தானம் செய்தல்.

14, ஹர்ஷணம் நாமயோகம்

யோகி: உத்திராடம் - 9 ஆம் பாதகம், 10 ஆம் பாதகம்.
அவயோகி: பூசம் - 4 ஆம் பாதகம்.
யோகி
கோவிலில் திருப்பணிகள் செய்தல்.
அவயோகி
வயதான அம்மா வயதுடையோருக்கு செருப்பு தானம் செய்தல்.

15, வஜ்ரம் நாமயோகம்

யோகி: திருவோணம் - 10 ஆம் பாதகம்.
அவயோகி: ஆயிலியம் - 4 ஆம் பாதகம்.
யோகி
ஒரு தன்னார்வத் தொண்டு அறக்கட்டளையில் உறுப்பினராகச் சேர்ந்தால், யோகி செயல்படும்.
அவயோகி
குழந்தைகளுக்கு படிக்கும் பொருட்களை தானம் செய்தல்.

16, சித்தி நாமயோகம்

யோகி: அவிட்டம் - 10 ஆம் பாதகம், 11 ஆம் பாதகம்.
அவயோகி: மகம் - 5 ஆம் பாதகம்.
யோகி
தொழில் செய்யும் ஏழைகளுக்கு உதவுதல்.
அவயோகி
தர்ப்பணம் செய்பவர்களுக்கு உதவுதல்.

17, வியதீபாதம் நாமயோகம்

யோகி: சதயம் - 11 ஆம் பாதகம்.
அவயோகி: பூரம் - 5 ஆம் பாதகம்.
யோகி
நிலையான வைப்புத் தொகையில் (நிலையான வைப்பு) சேமிப்பு செய்தால், யோகி செயல்படும்.
அவயோகி
ஏழை பெண் குழந்தைக்கு விளையாட்டுப் பொருட்களை தானமாக வழங்குவதன் மூலம் அவயோகி செயலிழக்கும்.

18, வரியான் நாமயோகம்

யோகி: பூரட்டாதி - 11 ஆம் பாதகம், 12 ஆம் பாதகம்.
அவயோகி: உத்திரம் - 5 ஆம் பாதகம், 6 ஆம் பாதகம்.
யோகி
புதிய வங்கிக் கணக்கைத் திறந்து பணம் சேமிப்பவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் யோகி செயல்படும்.
அவயோகி
பிறரின் ஸ்கேன் பரிசோதனைக்குச் உதவி செய்வதன் மூலம் அவயோகி செயலிழக்கும்.

19, பரிகம் நாமயோகம்

யோகி: உத்திரட்டாதி - 12 ஆம் பாதகம்.
அவயோகி: ஹஸ்தம் - 6 ஆம் பாதகம்.
யோகி
அடிக்கடி பாதயாத்திரை மேற்கொள்வதன் மூலம் யோகி செயல்படும்.
அவயோகி
அரசு மருத்துவமனையில் (G.H.) உள்ள நோயாளிகளுக்கு உதவுவதன் மூலம் அவயோகி செயலிழக்கும்.

20, சிவம் நாமயோகம்

யோகி: ரேவதி - 12 ஆம் பாதகம்.
அவயோகி: சித்திரை - 6 ஆம் பாதகம், 7 ஆம் பாதகம்.
யோகி
பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றுவதன் மூலம் யோகி செயல்படும்.
அவயோகி
நோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவுவதன் மூலம் அவயோகி செயலிழக்கும்.

21, சித்தம் நாமயோகம்

யோகி: அவிட்டம் - 1 ஆம் பாதகம்.
அவயோகி: சதயம் - 7 ஆம் பாதகம்.
யோகி
கோவிலில் நாத்திகர்களுக்கு உதவுவதன் மூலம் யோகி செயல்படும்.
அவயோகி
கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண சேவைக்கு உதவுவதன் மூலம் அவயோகி செயலிழக்கும்.

22, சாத்யம் நாமயோகம்

யோகி: பரணி - 1 ஆம் பாதகம்.
அவயோகி: விசாகம் - 7 ஆம் பாதகம் & 8 ஆம் பாதகம்.
யோகி
நாத்திகர்களுக்கு அடிக்கடி தானம் செய்வதன் மூலம் யோகி செயல்படும்.
அவயோகி
கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு புதுமையான பரிசுப் பொருட்களை வழங்குவதன் மூலம் அவயோகி செயலிழக்கும்.

23, சுபம் நாமயோகம்

யோகி: கார்த்திகை - 1 ஆம் பாதகம், 2 ஆம் பாதகம்.
அவயோகி: அனுஷம் - 8 ஆம் பாதகம்.
யோகி
தலைக்கவசம் தானம் செய்வதன் மூலம் யோகி செயல்படும்.
அவயோகி
ஏழைகளின் அறுவை சிகிச்சைக்காக உதவுவதன் மூலம் அவயோகி செயலிழக்கும்.

24,சுபகிருது நாமயோகம்

யோகி: ரோகிணி - 2 ஆம் பாதகம்.
அவயோகி: கேட்டை - 8 ஆம் பாதகம்.
யோகி
அடிக்கடி வீட்டில் இருப்பதன் மூலம் யோகி செயல்படும்.
அவயோகி
குளியலறை அல்லது கழிப்பறை கட்டிக் கொடுக்க உதவுவதன் மூலம் அவயோகி செயலிழக்கும்.

25, பிராம்யம் நாமயோகம்

யோகி: மிருகசீரிடம் - 2 ஆம் பாதகம், 3 ஆம் பாதகம்.
அவயோகி: மூலம் - 9 ஆம் பாதகம்.
யோகி
தனது வரவு செலவுகளை தினமும் எழுதி வைத்தால், யோகி செயல்படும்.
அவயோகி
ஜோதிடர்களுக்கு உதவுவதன் மூலம் அவயோகி செயலிழக்கும்.

26, மஹேந்திரம் நாமயோகம்

யோகி: திருவாதிரை - 3 ஆம் பாதகம்.
அவயோகி: பூராடம் - 9 ஆம் பாதகம்.
யோகி
அடிக்கடி மேடைப் பேச்சுகளில் ஈடுபடுவதன் மூலம் யோகி செயல்படும்.
அவயோகி
முதுநிலைப் பட்டப்படிப்பு (PG) படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவுவதன் மூலம் அவயோகி செயலிழக்கும்.

27, வைத்ருதி நாமயோகம்

யோகி: புனர்பூசம் - 3 ஆம் பாதகம், 4 ஆம் பாதகம்.
அவயோகி: உத்திராடம் - 9 ஆம் பாதகம், 10 ஆம் பாதகம்.
யோகி
கூரியர் விநியோக ஊழியர்களுக்கு உதவுவதன் மூலம் யோகி செயல்படும்.
அவயோகி
ஆதரவற்றவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் அவயோகி செயலிழக்கும்.

உங்கள் ஜாதகத்தில் எந்த நாம யோகம் உள்ளது?

உங்கள் ஜாதகத்தில் எந்த நாம யோகம் உள்ளது என்பதை அறிந்து கொள்ள பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகிய விவரங்களின் அடிப்படையில் ஜாதகத்தைப் பார்க்கலாம்.

ஜாதகம், ராசி, நட்சத்திரம், யோகங்கள் மற்றும் ஜோதிட பரிகாரங்கள் தொடர்பான மேலும் தகவல்களுக்கு வாஸ்துபரம் இணையதளத்தைப் பார்வையிடுங்கள்:

https://www.vasthuparam.com/

குறிப்பு: இந்தப் பதிவில் உள்ள பரிகாரங்கள் ஜோதிட மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.