அவரவர் பிறந்த கர்ணத்தின்படி கீழ்க்கண்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் கர்ணத்தை வலுப்படுத்தி, காரிய சித்தி பெறலாம்.
1. பவகர்ணம் அதிபதி செவ்வாய்
- கொல்லூர் மூகாம்பிகை வழிபாடு – மிகவும் சக்தி வாய்ந்தது.
- நாமக்கல் நரசிம்மர் வழிபாடு சிறப்பு.
2. பாலவ கரணம் - அதிபதி – ராகு
- ஐயப்பன் வழிபாடு வெற்றி
- திருவெற்காடு வழிபாடு வெற்றி
- கருமாரியம்மன் வழிபாடு வெற்றி
3. கெளலவ கரணம் - அதிபதி – சனி
- காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் வழிபாடு வெற்றி
4. தைதுலை கரணம் - அதிபதி – சுக்கிரன்
- அசாம் காமாக்யா கோவில் வழிபாடு வெற்றி.
5. கரசை கரணம் - அதிபதி – சந்திரன்
- பிள்ளையார்பட்டி வழிபாடு – வெற்றி.
6. வணிசை கரணம் - அதிபதி - சூரியன்
- திருவண்ணாமலை வழிபாடு வெற்றி.
7. பத்திரை கரணம் - அதிபதி - கேது
- திருச்செந்தூர் முருகர் வழிபாடு வெற்றி.
8. சகுனி கரணம் - அதிபதி - சனி
- திருநள்ளாறு வழிபாடு
- திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் வழிபாடு வெற்றி.
9. சதுஷ்பாத கரணம் - அதிபதி - குரு
- சொர்ணகார்ஷண பைரவர் வழிபாடு வெற்றி
10. நாகவம் கரணம் - அதிபதி - ராகு
- நாகராஜர் & திருநெல்வேலி ரெட்டைத் திருப்பதி வழிபாடு – வெற்றி தரும்.
11. கிம்ஸ்துக்னம் கரணம் – புதன்
- தன்வந்திரி வழிபாடு & மதுரை மீனாட்சி வழிபாடு வெற்றி
கர்ணங்களைச் செயல்படுத்தும் முறைகள்
ஜோதிடத்தில் கர்ணம் என்பது பஞ்சாங்கத்தின் முக்கியமான அங்கங்களில் ஒன்றாகும். ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள கரணத்தின் தன்மையைப் பொறுத்து வாழ்க்கையில் பல்வேறு விதமான அனுபவங்கள் ஏற்படலாம் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
ஒவ்வொரு கர்ணத்திற்கும் ஒரு அதிபதி கிரகம் குறிப்பிடப்படுகிறது. அந்தக் கரணத்தின் அதிபதி கிரகத்திற்குரிய தெய்வ வழிபாடு, கோவில் வழிபாடு மற்றும் குறிப்பிட்ட பரிகார முறைகளை மேற்கொள்வதன் மூலம் கரணத்தைச் செயல்படுத்தலாம் என்று ஜோதிட மரபில் கூறப்படுகிறது.
இந்தப் பதிவில் பவ கரணம் முதல் கிம்ஸ்துக்ன கரணம் வரை, ஒவ்வொரு கரணத்தையும் செயல்படுத்தும் முறைகள் மற்றும் அதற்குரிய வழிபாடுகளைப் பார்க்கலாம்.
உங்கள் ஜாதகம், ராசி, நட்சத்திரம் மற்றும் பிற ஜோதிடத் தகவல்களை அறிந்துகொள்ள வாஸ்துபரம் இணையதளத்தைப் பார்வையிடலாம்.